Ticker

6/recent/ticker-posts

தொலைந்து போன சொத்து பத்திரம் நகல் Online-ல் Download செய்யலாம்.

தொலைந்து போன சொத்து பத்திரம் நகல் Online-ல் Download செய்யலாம்.

                                                             Click Here

காணாமல் போன சொத்து பத்திரத்தை இணைய வழி மூலமாக நகல் திரும்ப பெற முடியும் அதை எவ்வாறு விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.


https://tnreginet.gov.in/ இந்த   இணையதளத்தின் மூலமாக உங்களுக்கான ஒரு Account  உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களுடைய அக்கவுண்டை லாகின் செய்து கொள்ள வேண்டும்.


 உங்களுக்கான Account உருவாக்கிய பிறகு முகப்பு பக்கத்தில் மேலே மின்னணு சேவைகள் என்ற Option  தேர்வு செய்ய வேண்டும். அதில் இரண்டாவதாக சான்றளிக்கப்பட்ட நகல் என்ற பதிவை தேர்வு செய்து கொள்ள வேண்டும் அடுத்தது சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் தேடல் அப்படிங்கிற பதிவை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.


 சொத்து சம்பந்தப்பட்ட விவரங்களை பதிவிட வேண்டி இருக்கும் அதற்கான ஆவண எண் உங்களுடைய வில்லங்கச் சான்றிதழில் கொடுத்திருப்பார்கள் உங்களுக்கான வில்லங்கச் சான்றிதழ் எவ்வாறு பட்டா எண் இல்லாமல் பதிவிறக்கம் செய்வது என்ற வீடியோவை நமது யூடியூப் சேனலில் பதிவிறக்கம் செய்து உள்ளோம் அந்த வீடியோவை பார்த்து வில்லங்கச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.  அதன் பிறகு உங்களுடைய ஆவண எண் இதில் பதிவு செய்து கொள்ள வேண்டும் அடுத்தது உங்களுடைய சார்பதிவாளர் அலுவலகம் உங்கள் அருகாமையில் எங்கு உள்ளதோ அதை தேர்வு செய்து கொள்ளவேண்டும் எந்த வருடத்தில் உங்களுடைய பத்திரம் பதிவான வருடமோ அதை நீங்கள் பதிவிட வேண்டும்.  உங்களுக்கான குறியீடு கொடுத்திருப்பார்கள் அதை உள்ளிட்ட செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


 உங்களுடைய விவரங்களை பதிவிட வேண்டும் உங்களுடைய பெயர் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பதிவிடF2 என்ற கீயை பயன்படுத்தி ஆங்கிலத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அடுத்தது உங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.


 உங்களுக்கான கட்டண விவரங்கள் எவ்வளவு என்பதனை காண்பிப்பார்கள் இந்த கட்டணத்தை உங்களது இணைய வழி மூலமாக நீங்கள் செலுத்த வேண்டும்.


 விண்ணப்ப எண் உங்களுக்கு கொடுப்பார்கள் அந்த விண்ணப்ப எண்ணை நீங்கள் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் இந்த விண்ணப்ப எண்ணை வைத்து உங்களுடைய பத்திர நகலை நீங்கள் திரும்ப எடுக்க உங்களுக்கு வழியாக இருக்கும்.


 தொலைந்த பத்திரத்தின் நகலை திரும்ப எடுப்பதற்காக முகப்பு பக்கத்தில் மின்னணு சேவைகள் என்ற சேவையை தேர்வு செய்து சான்றளிக்கப்பட்ட நகல் என்ற தேர்வை தேர்வு செய்து கொள்ளுங்கள் பிறகு கோரிக்கை பட்டியல் என்ற பதிவில் உங்களுடைய டாகுமெண்ட் ஒரு சில நாட்களில் உங்களுக்கு டவுன்லோட் செய்யும் வசதியை கொடுப்பார்கள் அதன் பிறகு உங்களுடைய தொலைந்த பத்திரத்தின் நகலை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


Website Link: https://tnreginet.gov.in/


Video Link: https://youtu.be/ky1LVuCijzM


Post a Comment

0 Comments